search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூ யார்க் டைம்ஸ்"

    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களுக்கு வாடிக்கையார்களின் தகவல்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஃபேஸ்புக் பதில் அளித்துள்ளது. #Facebook #databreach
    வாஷிங்டன்:

    ஸ்மார்ட்போன் தயாரிக்கும் 60 நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சாம்சங், பிளாக்பெரி, அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் ஒப்பந்தமிட்டிருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கேம்ப்ரிடிஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, இதுவரை பலகட்ட விசாரணைகளில் ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் அந்நிறுவன உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். 

    கேம்ப்ரிடஜ் அனாலிடிகா விவகாரம் இன்றளவும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் நிலையில், நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய குற்றச்சாட்டுக்கள் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

    இந்நிலையில் நி யார்க் டைம்ப்ஸ் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை ஃபேஸ்புக் மறுத்திருக்கிறது. நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்து இருப்பது போன்று ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் அதிகபட்ச தகவல்களை பயன்படுத்த எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் மிக கடுமையாக பாதுகாக்கப்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கும் மென்பொருள் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த மென்பொருளின் தகவல்களை அமேசான், ஆப்பிள், பிளாக்பெரி, ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட் மற்றும் சாம்சங் போன்ற 60 நிறுவனங்கள் பயன்படுத்தி வந்ததாக ஃபேஸ்புக் சேவை பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்கிபாங் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் வாடிக்கையாளர் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்ததற்கு மாற்றாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் நண்பர்கள் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி பகிர்ந்து கொள்கிறது என குறிப்பிடப்பட்டது. 

    மேலும், சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களது நண்பர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாமென கேட்டு கொண்ட பின்பும் ரகசியமாக பயன்படுத்தியதாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களை முற்றிலும் மறுக்கும் வகையில், நண்பர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட பயனர்கள் தங்களது சாதனங்களில் அதற்கான அனுமதி அளித்திருந்தால் மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக ஐம் ஆர்கிபாங் தெரிவித்துள்ளார். #Facebook #databreach #SocialMedia
    ×